Tuesday, January 24, 2012

T.R. Mahalingam Songs

T.R. மகாலிங்கம்



T.R. மகாலிங்கம்

1926 ஆம் ஆண்டு பிறந்த மகாலிங்கம், ஏழு வயதிலே தன் முதல் அரங்கேற்றம் செய்தார் மாலி. புல்லாங்குழலில் மட்டுமல்ல, ஒரு பாடகராகவும் T.R. மகாலிங்கம் தேர்ச்சி பெற்றவர். அந்தக் காலத்தில் ஒலிப்பெருக்கிகள் இல்லாததால் பாடுபவர்கள் சற்று அதிக சத்தத்துடன் பாட வேண்டும். நம்புங்கள், T.R. மகாலிங்கத்தின் குரல் ஒரு கி.மீ. தூரம் வரை கேட்கும். இன்று வரை ஹை பிட்ச்சில் சந்ததி போடும் பாடகர் இவரைத் தவிர யாருமில்லை. மாலதி மேடைகளில் அதை முயற்சி செய்கிறார். ஒரு சில பாடல்களில் எஸ்.பி.பி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் 
T.R. மகாலிங்கம் அளவிற்கு பெர்ஃபெக்‌ஷன் யாருக்குமில்லை. சூஃபி பாடகர் கைலாஷ் கேர் கொஞ்சம் அருகில் வருகிறார்.

சினிமா பிரவேசம்:

நந்தகுமார் என்ற படத்தில் கிருஷ்ணர் வேடமிட்டு அறிமுகமானார் T.R. மகாலிங்கத்தின். பாடல்கள் ஹிட்டானாலும் படம் தோல்வி. அதன் பின் T.R. மகாலிங்கத்தின் மார்க்கெட்டை உயர்த்திய படம் ஸ்ரீவள்ளி. அந்தக் கால படங்களில் நாம் கேள்விப்பட்டது போலவே 30, 40 பாடல்கள் இருக்கும். இவர் நடித்து வெற்றி பெற்ற எல்லா படங்களின் பாடல்களும் ஹிட் ரகமே. இந்தியா சுதந்திரமடைந்த பின் வந்த ”நாம் இருவர்” T.R. மகாலிங்கத்தை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. மதுரையில் முதலில் வெளிவந்த இந்தப் படத்தின் முதல் காட்சியே பாரதியின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல் தான். ஆர்ப்பரித்தது ரசிக கூட்டம். அரங்கில் இருந்த
T.R. மகாலிங்கத்தின்  அடையாளம் கண்டு கொண்டு தூக்கி வைத்துக் கொண்டாடியது மதுரை. அதன் பின் T.R. மகாலிங்கம் நடித்த ஞானசுந்தரி, லைலா மஜ்னூ,இதய கீதமெல்லாம் அவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. புகழ் போதையா அல்லது தவறான சகவாசமா? என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. சில சொந்த படங்களும் அவரை ஏமாற்றியது. சுருண்டு போனவரை நிமிர செய்த படம்தான் இன்றும் T.R. மகாலிங்கம் க்கு அடையாளமாக இருக்கிறது. ஆம். கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை. செந்தமிழ் தேன்மொழியாள். ஒரு முறை பாட்டை ரசித்துவிட்டு வாருங்கள்.

KANNGALIN VENNILAVAE - Download
ILAYA KANNIYIN - Download 
OM JAGAMATHIL - Download 
THANJAI PERIYA KOIL - Download
SENTHAMIZH THAENMOZHIYAL - Download
NAMACHIVAYA ENA - Download
ISAI THAMIZH NEE SEIDA - Download
AASAI KONDAEN AMUDHAMAE - Download
KODI KODI INBAM THARVAE - Download
AANDAVAN DHARISANAME - Download
THENDRALODU UDAN PIRANTHAAL - Download
ISAIYAAI THAMIZHAAI - Download
SANGAM MUZHANGIVARUM - Download
KALAIYATHA AASAI - Download
AADAI KATTI - Download

2 comments:

  1. Replies
    1. Thanks for ur comments. we are need all of your feedback this will help us for improve our websites.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...